• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

நெல்லையில் ஹெல்மெட் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி..!

Byவிஷா

Mar 20, 2023

நெல்லையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகர காவல் துறை, கோபாலசமுத்திரம் “கிராம உதயம்” அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த பாளையங்கோட்டை தூய சவேரியார் தன்னாட்சி கல்லூரி சமூக பணித்துறை- ஆகியன இணைந்து நடத்திய, ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்த, மாபெரும் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி, இன்று அதிகாலை, பாளையங்கோட்டை பேருந்து நிலையம் முன்பிருந்து தொடங்கியது.
இந்த விழிப்புணர்வு பேரணியை, “கிராம உதயம்” அமைப்பை சேர்ந்த “தன்னார்வ தொண்டர்” முருகன், அனைவரையும் வரவேற்று, பேசினார். “கிராம உதயம்” அமைப்பின், நிறுவனரும்- தலைவருமான டாக்டர் வி.சுந்தரேசன், முன்னிலை வகித்தார். “கிராம உதயம்” அமைப்பின், வழக்கறிஞர் எஸ்.புகழேந்தி பகத்சிங், தூய சவேரியார் தன்னாட்சி கல்லூரி சமூகப் பணித்துறை தலைவர் பால்ராஜ், உதவி பேராசிரியர் சகாயராஜ் ஆகியோர் “வாழ்த்துரை” வழங்கினர்.


திருநெல்வேலி கிழக்கு மண்டலம், சட்டம்- ஒழுங்கு பிரிவு துணை ஆணையாளர் வி.ஆர்.ஸ்ரீநிவாசன், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, ஹெல்மெட் விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணியை, “பச்சைக்கொடி” அசைத்து, துவக்கி வைத்தார். பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த, இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி, முக்கிய வீதிகள் வழியாக பயணித்து, புறப்பட்ட இடத்திற்கே, மீண்டும் வந்து சேர்ந்தது.
ஒவ்வொரு வாகனத்திலும், விழிப்புணர்வு வாசக அட்டைகள், தொங்கவிடப்பட்டு இருந்தன. பேரணியின் போது, வழிநெடுகிலும், விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட, “துண்டுப்பிரசுரங்கள்” விநியோகம் செய்ப்பட்டன. பேரணியின் முடிவில், “கிராம உதயம்” அமைப்பின், தன்னார்வ தொண்டர் பேச்சியம்மாள், அனைவருக்கும் “நன்றி” கூறினார்.
முன்னதாக, பேரணியில் பங்கேற்க வந்திருந்த, இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவருக்கும், “கிராம உதயம்” சார்பாக, தலா ஒரு மரக்கன்று மற்றும் ஒரு மஞ்சள் பை ஆகியன, “நினைவு பரிசு” ஆக, வழங்கப்பட்டன.