• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

8ம் வகுப்பு மாணவர் ஜம்பிங் ஜாக்ஸ் செய்து உலக சாதனை முயற்சி

ByKalamegam Viswanathan

Mar 20, 2023

ராஜபாளையத்தை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவர் மணிகண்டன் தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம் ஜம்பிங் ஜாக்ஸ் செய்து உலக சாதனை முயற்சி மேற்கொண்டார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ராசு என்பவரது மகன் மணிகண்டன். இவர் தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வருகிறார். வீட்டின் அருகே உள்ள தனியார் கிளப்பை சேர்ந்த ஐயப்பன் என்பவரிடம், கடந்த இரண்டு மாதங்களாக ஜம்பிங் ஜாக்ஸ் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
இன்று தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம் ஜம்பிங் ஜாக்ஸ் செய்யும் நோபல் உலக சாதனை முயற்சியில் மணிகண்டன் ஈடுபட்டார். காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
திருவள்ளுவர் மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பொது மக்கள் முன்னிலையில் தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம் மணிகண்டன் ஜம்பிங் ஜாக்ஸ் செய்தார்.சாதனையின் முடிவில் காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் மாணவரின் தந்தை ராசு, தாய் மீனாட்சி ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டினார். மேலும் தனியார் கிளப் சார்பில் வழங்கப்பட்ட சாதனை விருதையும் மாணவருக்கு கூடுதல் கண்காணிப்பாளர் வழங்கினார்.இவரது இந்த சாதனை வீடியோ பதிவு செய்யப்பட்டு நோபல் சாதனை நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது