தஞ்சாவூரில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாறாக இயற்கை மாற்றுப் பொருள் கண்காட்சி நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கவர்களை ஒழித்து விட்டு மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், தஞ்சாவூர் பெரிய கோயில் வளாகத்தில் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தஞ்சாவூர் மாநகராட்சி மற்றும் கவின்மிகு தஞ்சை இயக்கம் சார்பில் நெகிழி மாசில்லா தஞ்சாவூர் மாவட்டம் நெகிழிப் பொருட்களுக்கான மாற்றுப் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.
சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க சென்னை உயர்நீதிமன்றம் மாறும் தேசிய பசுமை தீர்ப்பாயம் மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தடையை கடுமையான நடடிக்கைகளை எடுக்கவும் அரசுக்கு தொடர்ந்து உத்தரவுகளை வழங்கி வருகின்றன. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் கல்வி நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ததை நிறைவேற்றும் வகையில் அதனை விற்பைனை செய்யும் நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
முதன் முறையாக வணிக நிறுவனங்களில் பயன்படுத்தினால் ரூ.25 ஆயிரமும், துணிக்கடைகளில் பயன்படுத்தினால் ரூ.10 ஆயிரமும், மளிகை கடைகள், மருத்து கடைகள், நடுத்தா நிறுவனங்களுக்கு ரூ- 1000, சிறு வணிக நிறுவனங்களுக்கு ரூ-100- அபராதம் விதிக்கப்படும். இக்கண்காட்சியானது காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். இந்தக் கண்காட்சியை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இக்கண்காட்சியில் காகித பொருட்கள், துணி பொருட்கள், பனை ஒலை பொருட்கள், சணல் பொருட்கள், தென்னை நார் பொருட்கள், வாழை நார் பொருட்கள், நெல் உமி பொருட்கள், கரும்பு சக்கை பொருட்கள், மூங்கில் பொருட்கள், களிமண் பொருட்கள், துணி விளம்பர பதாகை என மக்கும் பொருட்கள் அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கால்நடைகளின் தீவனமான தவிடு கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட டீ கப் மற்றும் ஸ்பூன், வண்ண காகிதங்களால் ஆன சுவர் அலங்காரப் பொருட்கள். பனை ஓலை கொண்டு செய்யப்பட்ட கம்மல், நெக்லஸ், கீ செயின், ஆரம் உள்ளிட்ட பெண்களுக்கான அழகுப் பொருட்கள் விற்பனை அரங்குகள் இடம்பெற்றுள்ளன. இவை நெகிழியை விட விலை கூடுதலாக இருந்தாலும் நெகிழி பயன்படுத்தி வரும் நோய்க்கு செய்யும் செலவு தொகையை விட குறைவுதான் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கவின்மிகு தஞ்சை இயக்க தலைவர் மருத்துவர் ராதிகா மைக்கேல், செயலானர் முனைவர் பர்வீன், பொருளாளர் செல்வராணி, திருச்சி பிஷ் ஹீபர் கல்லூரி துணை முதல்வர் அழகப்பா மோசஸ், ஜன சேவா பவன் சியாமளா முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்க, நெகிழியை ஒழிப்போம்..! இயற்கைப் பொருள்களை வரவேற்போம்..!