• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சோலாடா 25 ஆம் ஆண்டுவெள்ளி விழா

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சோலாடா 25 ஆம் ஆண்டுவெள்ளி விழாவில் உதகை சட்டமன்ற உறுப்பினர் கணேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .உதகை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மாயன் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார்.

இந்த இந்த நிகழ்வில் உதகை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சந்தோஷ் மற்றும் நீலகிரி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள், சோலாடா,ஆல்காட் நகர், பன்னி மரம், செம்மலை,கல்லட்டி ,மாசிக்கல் ஆசான துரை சுற்று வட்டார கிராம தலைவர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பெற்றோர்கள் முன்னாள் மாணவர்கள் பள்ளியில் பணிபுரிந்த முன்னாள் ஆசிரியர்கள் முன்னாள் தலைமை ஆசிரியர்கள் சுற்றுவட்டார பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டு மிக சிறப்பாக விழாவில் நடத்தி கொடுத்தனர். இந்த விழாவில் ரமேஷ் ஆசிரியர் தொகுத்து வழங்கினார் தலைமையாசிரியர் பியூலா வரவேற்றார் ,பள்ளிகள் ஆண்டு அறிக்கை ஏஞ்சலா பொன்மணி ஆசிரியைவசித்தார் , குழந்தைகளுக்குபரிசுகளை திருமதி கல்பனா ஆசிரியைவாசித்தார் இறுதியாக திருமதி மல்லிகா ஆசிரியை ஆசிரியை நன்றி கூறினார்