• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

காரியாபட்டி, நரிக்குடி பகுதிகளில் அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கிவைத்தார்

ByKalamegam Viswanathan

Mar 17, 2023

காரியாபட்டி மற்றும் நரிக்குடி பகுதியில் கண்மாய் தூர்வாரும் பணிகளை, அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கிவைத்தார்.

விருதுநகர் மாவட்டம், தமிழக அரசு நீர் வளத்துறை சார்பாக, காரியாபட்டி ஒன்றியத்தை சேர்ந்த இலுப்பைகுளம், எஸ்.கடமங்குளம், நரிக்குடி ஒன்றியத்தில் களத்தூர், கீழகொன்றைக்குளம் ஆகிய கண்மாய்களை தூர்வாரும் பணிகளுக்கு 3 கோடி நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டது.

தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கண்மாய் தூர்வாரும் பணிகளை இலுப்பகுளம் கிராமத்தில் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் மலர்விழி செயற் பொறியாளர் கலைச்செல்வி, ஒன்றிய கழகச் செயலாளர்கள் செல்லம், கண்ணன் பேரூராட்சித்தலைவர் செந்தில் , ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் ராஜேந்திரன் , ஊராட்சி மன்றத் தலைவர் ஆதி ஈஸ்வரன்,விவசாய ஆத்மா குழு தலைவர் கந்தசாமி வேப்பங்குளம், தண்டீஸ்வரன், உட்பட பலர் கலந்துகொண்டனர்.