• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தேசிய அளவிலான டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி வீரர்களுக்கு வழியனுப்பும் விழா

தேசிய அளவில் நடைபெறும் டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்கும் வீரர்கள் வழியனுப்பு விழா சேலத்தில் நடைபெற்றது.. ராகுல் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் தேசிய தலைவர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து வழி அனுப்பி வைத்தார்….


டென்னிஸ் பால் கிரிக்கெட் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில் தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டி உத்தரகாண்ட் மாநிலத்தில் மார்ச் 17, 18,19, ஆகிய மூன்று தினங்கள் நடைபெற உள்ளது .இந்த போட்டியில் இந்தியாவில் உள்ள தமிழகம் உள்பட ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா உத்தரகாண்ட் மத்திய பிரதேசம் உள்பட 32 மாநில வீரர்கள் பங்கேற்க உள்ளனர் ஓபன் மேட்ச் முறையில் நடைபெறும் இந்த கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் பங்கேற்கும் ராகுல் ஸ்போர்ட்ஸ் அகாடமி வீரர்கள் இன்று ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு புறப்பட்டுச் சென்றனர் முன்னதாக அவர்களை சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ராகுல் ஸ்போர்ட்ஸ் தேசிய தலைவர் விஜய் லட்சுமணன் அவர்கள் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து சால்வை அணிவித்தார் தொடர்ந்து இந்த ஆண்டு தமிழ்நாடு முதலிடம் பிடிக்கும் வகையில் விளையாட வேண்டும் என்று வீரர்களுக்கு அறிவுரை வழங்கினார்