• Wed. Jun 18th, 2025
[smartslider3 slider="7"]

ராஜபாளையம் சஞ்சீவி மலையில் தீ விபத்து-பொது மக்கள் அச்சம்

ByKalamegam Viswanathan

Mar 14, 2023

ராஜபாளையத்தில் உள்ள சஞ்சீவி மலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மலையை சுற்றிலும் குடியிருப்புகள் இருப்பதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் சஞ்சீவி மலை அமைந்துள்ளது. இந்த மலையின் அடிவாரத்தில் உள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் மலையில் அமைந்துள்ள கழுதகடவு பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஒரு பகுதியில் பற்றிய நெருப்பு காற்றின் வேகம் காரணமாக பல்வேறு இடங்களுக்கு வேகமாக பரவியது.மலையின் மேல் பகுதியில் எரியும் நெருப்பு சில சமயங்களில் குடியிருப்புகளை நோக்கி பரவுவதால், அடிவாரத்தில் வசிக்கும் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.எனவே வனத்துறையினர் விரைந்து தீயை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..