• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

ஐடி ரெய்டு’ பிபிசி அளித்த விளக்கம்

ByA.Tamilselvan

Feb 17, 2023

டெல்லி , மும்பையில் உள்ள பிபிசி அலுவலகத்தில் கடந்த 3 நாட்களாக ஐடி ரெய்டு நடந்த நிலையில் இதுகுறித்து பிபிசி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
பிரதமர் மோடி குறித்து பிபிசி செய்தி நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன் ஆவணபடம் வெளியிட்டது.அதனை ஒன்றிய அரசு சமூகவலைத்தளங்களிலிருந்து நீக்கியது. அதே நேரத்தில் முப்பை ,டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகங்களில் கடந்த 3 நாட்களாக ஐடி ரெய்டு நடைபெற்றது. இதற்கு உலக அளவிலும், இந்திய பத்திரிகை சங்கங்கள் ,மற்றும் அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் டெல்லி, மும்பையில் உள்ள BBC அலுவலகத்தில் நடந்த ஐடி ரெய்டு முடிவுக்கு வந்த நிலையில் பிபிசி இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.
அதில், “இந்தியாவில் பிபிசி செய்தி சுமூக நிலைக்கு திரும்பி இருக்கிறது. பிபிசி நம்பகமான சுதந்திர அமைப்பாகும்.
எங்கள் சக ஊழியர்கள், பத்திரிகையாளர்களுக்கு ஆதரவாக நிற்கிறோம். அவர்கள் அச்சமின்றி தொடர்ந்து செய்திகள் வெளியிடுவர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.