• Thu. Aug 27th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

புத்தாண்டுக்கு வரும் தல அஜித்தின் வலிமை!..

Byமதி

Oct 13, 2021

‘நேர்கொண்ட பார்வை’ வெற்றிக்குப் பிறகு அஜித் எச்.வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘வலிமை’. அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமா குரேஷியும், வில்லனாக கார்த்திகேயாவும் நடிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

’வலிமை’ பொங்கலையொட்டி வெளியாகிறது என்று சமீபத்தில் அறிவித்த படக்குழு, படத்தின் முதல் பாடல் மட்டுமே எப்போது வெளியாகும் என்று அறிவித்ததுள்ளது.

ஆனால், ஃபர்ஸ்ட் லுக், புகைப்படங்கள், கிளிம்ப்ஸ் உள்ளிட்டவற்றை எப்போது வெளியாகும் என்று அறிவிக்காமல் திடீரென வெளியிட்டார் போனி கபூர். இப்படி அஜித் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதே போனி கபூர் வழக்கமாகக் கொண்டுள்ளார். அதேபோல், புத்தாண்டையொட்டி அஜித் ரசிகர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸாக ‘வலிமை’ படத்தின் டீசரை வெளியிட போனி கபூர் திட்டமிட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.