திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட செட்டிகுளம் ஊராட்சி மன்ற நடைபெற்ற தேர்தலில் அதிமுக பிரமுகர் அம்மா செல்வகுமார் மற்றும் திமுக பிரமுகர் விஜயன் இருவருக்கும் கடும் போட்டி நிலவி வந்தது.
விஜயன் ஏற்கனவே பஞ்சாயத்து தலைவராக பதவி வகித்தவர். இந்நிலையில் செட்டிகுளம் ஊராட்சிக்கு மொத்தம் 8426 வாக்குகள் பதிவாகின. ஓட்டு எண்ணிக்கையின் போது அம்மா செல்வகுமார் 5950 வாக்குகளும், விஜயன் 1981 வாக்குகளும், கார்த்தீசன்க 78 வாக்குகளும், விஜயகுமார் 68 வாக்குகளும் பெற்றனர்.
திமுக பிரமுகர் விஜயனை காட்டிலும் அதிமுக பிரமுகர் அம்மா செல்வகுமார் 3999 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக பிரமுகர் அம்மா செல்வகுமார் அதிமுக நெல்லை மாவட்ட வர்த்தக அணி செயலாளராக உள்ளார். கொரொனா காலத்தில் இவர் செய்த மக்கள் பணியே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் இவரை வெற்றி பெற்ற வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற அம்மா செல்வகுமாரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் நெல்லை மாவட்ட அதிமுக பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.