• Sat. Jul 11th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மதுரை திருமங்கலம் அருகே ஸ்ரீ சங்கையாசாமி திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா

ByKalamegam Viswanathan

Feb 9, 2023

திருமங்கலம் அருகே 15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற ஸ்ரீ சங்கையாசாமி திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா- ஏராளமான பக்தர்களுக்கு கோவில் சார்பில் அன்னதானம் .
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டை கிராமத்தில், 15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற ஸ்ரீ சங்கையா சாமி திருக்கோயிலின் மகா கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் .


முன்னதாக கோவில் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு, வேதாச்சாரியார்கள் புனித நீரை பூஜிக்க செய்து, அதனை தொடர்ந்து சாமிக்கு அபிஷேகங்கள் நடைபெற்றது இந்நிலையில் சிவரக்கோட்டை, கள்ளிக்குடி ,செங்கப்படை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது..