• Fri. Apr 19th, 2024

விடியற் காலை உலா வரும் காட்டெருமையால் மக்கள் பீதி…

ByRaja

Feb 9, 2023

நீலகிரி மாவட்டம் கூடலூர் பந்தலூர் தாலுகா பகுதிகளில் எருமைகள், காட்டி யானைகள் புலி சிறுத்தை புலித்தே வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக காட்டி யானைகள் அவ்வப்போது குடியிருப்புகளுக்குள் நுழைந்து வீடுகளையும் விவசாய நிலங்களையும் சேதப்படுத்தி வருகிறது இதனை தவிர்த்து புலி வளர்ப்பு மாடுகளை கொன்று வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து தற்போது வனவிலங்குகள் பகல் நேரங்களிலேயே சுற்றி திரிகிறது

. அந்த வகையில் இன்றைய தினம் தேவர்சோலை 13வது வார்டு தகரமூலா பகுதியில் காட்டெருமை ஒன்று உலா வந்தது.இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமும் அதிர்ச்சியும் அடைந்தனர்‌. மேலும் இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், தேவர்சோலை, பாடந்துறை உள்ளிட்ட பகுதிகளில் பகல் நேரங்களிலேயே வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. எனவே வனத்துறையினர் பகல் மற்றும் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டால் இது போன்ற சம்பவங்கள் நடப்பதை தவிர்க்கலாம் என்றும் ஆனால் வனத்துறையினர் வனவிலங்குகளிடம் இருந்து மக்களை காப்பாற்ற எந்த வித முயற்சியும் நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *