• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இன்று நள்ளிரவு 12 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை!..

Byadmin

Oct 13, 2021

சென்னையில் மெட்ரோ ரெயில்கள் தினசரி அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணிவரை இயக்கப்படுகின்றன. கொரோனா தளர்வுகள் காரணமாக மெட்ரோ ரெயில்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை, சனி, ஞாயிறும் சேர்ந்து 4 நாட்கள் விடுமுறையுடன் வருவதால் வெளியூர் செல்லக்கூடிய பயணிகள் வசதிக்காக மெட்ரோ ரெயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக மாலை 5 மணிமுதல் இரவு 8 மணி வரையில் 5 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது. இன்று ஒரு நாள் மட்டும் நள்ளிரவு 12 மணிவரை மெட்ரோ ரெயில் சேவை நீட்டிக்கப்படும் என்று நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு இது இன்று இரவு 10 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை 15 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரெயில் வீதம் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.