தேர்தல் ஆணைய உத்தரவின்படி, நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய ஓட்டு எண்ணிக்கை, வாக்கு சீட்டு முறை என்பதால் ஓட்டுகளை எண்ணுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான இடங்களில் விடிய விடிய ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இரண்டாவது நாளாக வாக்கு எண்ணும் பணிகள் இன்றும் நீடிக்கின்றன. தற்போது வெற்றி பெற்றவர்களின் விவரம் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முழுமையான முடிவுகள் இன்று மதியத்திற்க்குள் வெளியாகும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் 98 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாகவும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பெரும்பாலான இடங்களில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது.
ஒன்றிய கவுன்சிலர் முன்னிலை நிலவரம்
தி.மு.க. – 991 இடங்கள்
அ.தி.மு.க. – 200 இடங்கள்
மற்றவை 139 இடங்கள்
மாவட்ட கவுன்சிலர் முன்னிலை நிலவரம்
தி.மு.க. – 132 இடங்கள்
அ.தி.மு.க. – 2 இடங்கள்
விசிக – 3 இடங்கள்
மற்றவை 0 இடங்கள்