• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

+2 பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

ByA.Tamilselvan

Feb 9, 2023
School

+2 தேர்வு தேதிகள் மற்றும் முடிவு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை +2 தேர்வு நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மதியல் 1.15 மணி வரை தேர்வு நடைபெறும். காலை 10 மணி முதல் 10.10 வரை கேள்வித்தாளை படிப்பதற்கான நேரம். 10.10 முதல் 10.15 வரை மாணவர்கள் விவரங்கள் சரிபார்க்கப்படும். அதைத் தொடர்ந்து 10.15 மணிக்கு தேர்வு தொடங்கும். மார்ச் 13ஆம் தேதி மொழித்தேர்வு நடைபெற உள்ளது. மார்ச் 15ஆம் தேதி ஆங்கிலத் தேர்வு நடைபெறும். மார்ச் 17ஆம் தேதி கணினி அறிவியல் தேர்வு, மார்ச் 21 – இயற்பியல், பொருளாதாரம், மார்ச் 27 – கணிதம், விலங்கியல், வணிகவியல், மார்ச் 31 – உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் தேர்வுகள் நடைபெறும். ஏப்ரல் 3ஆம் தேதி வேதியியல், கணக்கியல், புவியியல் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 5ஆம் தேதி தேர்வு முடிவு வெளியாகிறது. இந்த ஆண்டு 8 லட்சத்திற்கும் அதிகமான தேர்வர்கள் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ளனர்.