• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பால்விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்திய அமுல் நிறுவனம்..!

Byவிஷா

Feb 3, 2023

பிரபல பால் மற்றும் பால் சார்ந்த பொருள் தயாரிப்பு நிறுவனமான அமுல் பாலின் அனைத்து வகைகளின் விலையை அதிகரித்து குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு அறிவித்துள்ளது.


குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு அமுல் பால் வகைகளின் விலை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில் அமுலின் அனைத்து வகை பால்களின் விலையை உயர்த்துவதாகத் தெரிவித்துள்ளனர். அதன் படி லிட்டருக்கு ரூ.3 அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலைப் பட்டியல் படி அமுல் தாசா 500 மி.லி பால் 27 ரூபாய்க்கும், 1 லிட்டர் பால் ரூ.54 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் அமுல் தாசா 2 லிட்டர் மற்றும் 6 லிட்டர், ரூ.108 மற்றும் ரூ.324 ஆக அதிகரித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, அமுல் கோல் 500 மி.லி பால் 33 ரூபாய்க்கும் 1 லிட்டர் 66 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 6 லிட்டர் பால் ரூ.396 ஆக விலை அதிகரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.