• Sat. Apr 20th, 2024

பள்ளிச்சீருடையுடன் சைக்கிளில் சட்டசபைக்கு வந்த எம்.எல்.ஏ.க்கள்..!

Byவிஷா

Feb 3, 2023

புதுச்சேரியில் பள்ளிச்சீருடை வழங்கப்படாததைக் கண்டிக்கும் வகையில், இன்று நடைபெறும் புதுச்சேரி சட்டமன்றக் கூட்டத்தொடருக்கு, பள்ளிச்சீருடையுடன் சைக்கிளில் வந்த எம்.எல்.ஏக்களால் அங்கு பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியதும் சபாநாயகர் செல்வம், மறைந்த இங்கிலாந்து ராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். முன்னதாக சட்டப்பேரவைக்கு வந்த திமுக எம்.எல்.ஏக்களான எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில், நாஜீம், அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார், நாக தியாகராஜன் ஆகியோர் பள்ளி சீருடை அணிந்தும், புத்தக பை மாட்டிக்கொண்டு சைக்கிளில் வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளிகள் தொடங்கி ஒருவருட காலம் முடிவடைய உள்ள நிலையில் இதுவரை மாணவர்களுக்கு அரசு பள்ளி சீருடை வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பள்ளி சீருடை அணிந்து சைக்கிளில் வந்தனர்.
பின்னர் பேரவையில் மாநில அந்தஸ்து தொடர்பாகவும், பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்குவது தொடர்பாக எந்த அறிவிப்பும் அறிவிக்காததால் திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக எதிர்கட்சி தலைவர் சிவா, ஒன்றரை வருடங்கள் ஆகியும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இதுவரை சீருடை, நோட்டு புத்தகங்ங்கள் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டினார். பஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் இதை நினைவு கூறும் வகையில் அங்கு உற்பத்தி செய்யப்படும் சீருடைகளை அணிந்து வந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *