• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

கனமழை – சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல திடீர் தடை…

ByA.Tamilselvan

Feb 2, 2023

நாளை முதல் 6 ம் தேதி வரை சதுரகிரிகோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் மழைகாரணமாக திடீரென தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் சென்று வழிபட பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட மாதத்தின் 8 நாள்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த கோவிலுக்கு தை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 6-ந் தேதி வரை பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைபகுதில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து சதுரகிரி மலை கோவிலுக்கு நானை மற்றும நாளை மறுநாள் பக்தர்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.