• Wed. Apr 24th, 2024

கோவில் கருவறைக்குள் அமைச்சர்கள் நுழைந்ததாக புகார்

Byஜெ.துரை

Feb 2, 2023

கோவில் கருவறைக்குள் அமைச்சர்கள் நுழைந்ததாக சென்னை அசோக் நகரில் உள்ள சிலைகடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு
பழனி முருகன் திருக்கோயில் கருவறைக்குள் 26.01.2023 அன்று மாலை விதியை மீறி அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் சக்கிரபாணி, மற்றும் நீதிமன்ற நீதி அரசர்கள் உள்ளிட்ட பலர் கருவறைக்கு உள்ளே சென்று கதவை மூடி மர்மமான முறையில் முருகப்பெருமானை சுரண்டி கடத்த முயற்சித்தனர் என்றும் அதற்கு நீதி விசாரணை வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ராம ரவிக்குமார் சென்னை அசோக்நகர் காவலர் பயிற்சி பள்ளியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.


இதன் பின்னர் செய்தியாளர்களை சந்திப்பின் போது கூறியதாவது:
பழனி முருகன் திருக்கோவில் கருவறைக்குள் 26.01. 2023ம் தேதி அன்று விதி மீறி ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி, திருக்கோவில் இணை ஆணையர் நடராஜன் , பழனி அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், மற்றும் திமுகவைச் சார்ந்தவர்கள் கதவை மூடிக்கொண்டு உள்ளே என்ன செய்தார்கள் என்று கேள்வி எழுப்பி புகார் மனு அளித்துள்ளோம். 26 ஆம் தேதி அன்று சிசிடிவியை ஆராய்ச்சி செய்ய வேண்டும் முருகன் சிலை உள்ளே இருக்கிறதா இல்லையா ,இல்லை அதை ஏதேனும் சேதப்படுத்தினார்களா,இல்லை களவாடி சென்று விட்டார்களா என்று தெரியவில்லை அது சம்பந்தமாக தான் நாங்கள் உரிய ஆதாரங்களுடன் புகார் மனு அளித்துள்ளோம் என்று கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *