• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பாஜக போட்டியிட்டாலும் வாபஸ் பெற போவதில்லை: ஜெயக்குமார் பேட்டி

ByA.Tamilselvan

Feb 2, 2023

பாஜக ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட்டாலும் எங்களது வேட்பாளரை வாபஸ் பெற மாட்டோம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார்.
ஈரோடு இடைத்தேர்தலில் .திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இதேபோன்று தேமுதிக சார்பில் ஆனந்த், அமமுக சார்பில் சிவபிரசாந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஈபிஎஸ் தரப்பு அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசு, ஓ.பி.எஸ் தரப்பில் முருகானந்தம் என்பவரும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.ஆனால் பாஜக யாருக்கும் ஆதரவும் தெரிவிக்கவில்லை. போட்டியிடப்போவதாக அறிவித்தாலும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. ஆனால் ஓபிஎஸ் பாஜக போட்டியிட்டால் எங்கள் வேட்பாளரை வாபஸ் பெறுவோம் என தெரிவித்துள்ளார்.
ஆனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டாலும் அதிமுக பழனிசாமி தரப்பு வேட்பாளர் வாபஸ் பெற போவதில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இடைத்தேர்தலில் முன்வைத்த காலை பின்வைக்க போவதில்லை என செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.