• Wed. Jul 29th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரியில் செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு – ஆட்சியரிடம் மனு!..

கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் 4 செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. குடியிருப்பு பகுதியில் டவர் அமைக்கப்பட்டிருப்பதால் பல குடும்பங்களில் உள்ள 20 வயதுக்கு குறைவானவர்களுக்கே கேன்சர் நோய் இருந்து வருகிறது. இது ஊர் மக்களை தீராத துயரத்தில் ஆழ்த்தி உள்ளதாகவும் , இன்னும் செல்போன் டவர் கூடுதலாக கொண்டு வருவதற்கான முயற்சியில் பல தனியார் கம்பெனிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தங்கள் ஊரை சுடுகாடாக மாற்றிவிடும் எனவும், செல்போன் டவர் அமைப்பதை தடுத்து பொது மக்களை காக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ஆட்சியர் அரவிந்த் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர்.