• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இன்று அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை

ByA.Tamilselvan

Jan 24, 2023

ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் இடைத்தேர்தல் குறித்து இபிஎஸ் ஆலோசனை நடத்துகிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துவிட்டார். இதற்காக கூட்டணி கட்சியினரிடம் ஆதரவு கோரி உள்ளார்கள். பா.ஜனதாவும் தனித்து போட்டியிடுமோ என்ற பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் தி.மு.க. கூட்டணியை எதிர்த்து நிற்க கூடிய பலம் வாய்ந்த கட்சி அ.தி.மு.க.தான் என்று அண்ணாமலை வெளிப்படையாகவே தெரிவித்து உள்ளார். எனவே அ.தி.மு.க.வுக்குத் தான் பா.ஜனதாவின் ஆதரவு என்பது உறுதியாகி விட்டது. இந்த நிலையில் அ.தி.மு.க.வினரும் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டார்கள். இன்று மாலையில் அ.தி.மு.க. மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட முக்கிய நிர்வாகிகள் கூட்டம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கிறது. எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் தொகுதியில் தேர்தல் பணிகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்று விவாதித்து முடிவு செய்கிறார்கள்.