• Thu. Jan 23rd, 2025

இரட்டை இலை சின்னம் கோரி என்னால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்-ஓபிஎஸ்

ByA.Tamilselvan

Jan 24, 2023

ஒருங்கிணைப்பாளராக இரட்டை இலை சின்னம் கோரி என்னால் மட்டுமே தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்க முடியும் என ஓபிஎஸ் பேட்டி
சென்னை எழும்பூர் அசோகா ஹோட்டலில் ஓபிஎஸ் அணி சார்பில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் நிர்வாகிகள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளரிடம் ஓபிஎஸ் பேசுகையில் … எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்வதாக தேர்தல் ஆணையத்திடம் கடிதம் அளித்துவிட்டார். ஆகவே ஒருங்கிணைப்பாளராக நான் மட்டும் இருக்கிறேன். ஆகவே இரட்டை இலை சின்னம் கோரி என்னால் மட்டுமே தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்க முடியும். விரைவில் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளரை அறிவிப்பேன். அதே நேரத்தில் பாஜக போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில் ஆதரவளிக்கவும் தயாராக உள்ளோம் என தெரிவித்தார்