• Wed. Mar 18th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

பாஜக போட்டியிட விரும்பினால் நாங்கள் ஆதரவு அளிப்போம் -ஓபிஎஸ் பேச்சு

ByA.Tamilselvan

Jan 21, 2023

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் பாஜக போட்டியிட விரும்பினால் நாங்கள் ஆதரவு அளிக்க தயாராக உள்ளோம் என ஓபிஎஸ் பேச்சு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தனது நிலைபாட்டை தற்போது ஓபிஎஸ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசும் போது ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக ஆதரவை கோர அதிமுக முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, சென்னையில் இன்று பாஜக தலைவர்களை அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்திக்க உள்ளனர். இரட்டை இலை சின்னம் பெற எங்களுக்கு தான் முழு உரிமை உள்ளது. ஒங்கிணைப்பாளராக நான் தொடருகிறேன். 2026ம் ஆண்டு வரை அதிமுக சார்பில் போட்டியிட முழு உரிமை உள்ளது. இரட்டை இலை சின்னம் கோரி ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்திடுவேன். சட்டவிரோதமாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாங்கள் அவமானப்படுத்தப்பட்டோம். ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. பாஜக, பாமக, த.மா.கா உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவை கோருவோம். கூட்டணி கட்சிகள் எங்களிடம் தொடர்ந்து பேசி வருகின்றனர். பாஜக போட்டியிட விரும்பினால் நாங்கள் ஆதரவு அளிப்போம். ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட கூட்டணி கட்சிகளுக்கு உரிமை உள்ளது. இரட்டை இலை சின்னம் முடங்குவதற்கு நான் ஒருபோதும் காரணமாக இருக்க மாட்டேன். பல்வேறு அணிகளாக பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்றிணைய வேண்டும். ஈபிஎஸ் தரப்புடன் பேச்சுவார்த்தைக்கு இப்போதும் தயார். ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாக இதுவரை ஈபிஎஸ் தரப்படன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. ஈரோடு இடைத்தேர்தலில் எங்கள் தரப்பில் போட்டியிடும் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார். இவ்வாறு அவர் கூறினார்.