• Fri. Mar 29th, 2024

திமுக கட்சியினரே திமுக ஆட்சியை விரும்பவில்லை- கே.டி.ராஜேந்திரபாலாஜி

Byதரணி

Jan 20, 2023


திமுகவினரே திமுக ஆட்சியை விரும்பவில்வை என சிவகாசியில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
அதிமுக நிறுவன தலைவர், தமிழக முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்ஜிஆர் 106வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கழக இடைக்கால பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க சிவகாசி மாநகராட்சி பைபாஸ் நாலு முக்கு ரோடு எம்ஜிஆர் திடலில் நடைபெற்றது. விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம், சிவகாசி சட்ட மன்ற தொகுதி கழகம், சிவகாசி கிழக்கு ஒன்றிய கழகம் சார்பாக நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்திற்கு சிவகாசி கூட்டுறவு பண்டகசாலை தலைவர் கே.ஏ.ஏ.அசன்பதுருதீன் தலைமை வகித்தார்..
சிவகாசி ஒன்றிய கழக செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, ஆரோக்கியம், வெங்கடேஷ், மாவட்ட எம். ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் பிலிப்வாசு, மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் விஜய்ஆனந்த், மாவட்ட பொருளாளர் தேன்ராஜன், சிவகாசி மாநகர பகுதி கழக செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரவணகுமார், கருப்பசாமிபாண்டியன், சாம் (எ) ராஜா அபினேஸ்வரன், விஸ்வநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.எஸ்.நாகராஜ், பொதுக்குழு உறுப்பினர் சித்துராஜபுரம் பாலாஜி, திருத்தங்கல் கூட்டுறவு வங்கி தலைவர் ரமணா, சிவகாசி கிழக்கு ஒன்றிய கழக துணைச் செயலாளர் மணிகண்டன், மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் முத்துராஜ் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய கவுன்சிலர் சுடர்விழிசசிகுமார், ஒன்றிய கவுன்சிலர் முருகவேல், ஒன்றிய கழகத் துணைச் செயலாளர் அமுதாகருப்பசாமி, தலைமைக் கழக பேச்சாளர் சின்னத்தம்பி, ஒன்றிய கழக பொருளாளர் கருப்பசாமிபாண்டியன், மாவட்ட பிரதிநிதிகள் துண்டு ராசு, முருகேஸ்வரிபெருமாள், செல்வம், மாநகர கவுன்சிலர் கரைமுருகன், மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் சகுந்தலா, சிவகாசி கிழக்குப் பகுதி கழகச் செயலாளர் சந்தனமணி, அம்மா பேரவை விசுவை செந்தில், ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் முனீஸ்வரன், சிவகாசி கிழக்கு ஒன்றிய மாணவரணி செயலாளர் வசந்தகுமார், ஒன்றிய மாணவரணி இணைச் செயலாளர் நிர்மல்குமார், பூலா பூரணி குமார், விவசாய அணி தலைவர் பாலகுருசாமி, கிளைகழக செயலாளர் கணேசன், நாரணாபுரம் கூட்டுறவு சங்கத் தலைவர் பூபதி ராஜாராம் வரவேற்புரையாற்றினர்.
சிறப்பு அழைப்பாளர்களாக கழக அமைப்புச் செயலாளரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திரபாலாஜி, சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், தலைமைக் கழக பேச்சாளர்கள் செல்வம், பரமக்குடி ஜமால், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், கழக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் சுப்பிரமணி, விருதுநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுபாஷினி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது,
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கொண்டு வந்த சத்துணவு திட்டம்தான் இன்றும் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு குழந்தைகள் சாப்பிட்டுக்கொண்டு இருக்கின்றனர். தை பொங்கலுக்கு புரட்சி தலைவர் எம்ஜிஆர் கொண்டு வந்த வேஷ்டி, சேலை தி்ட்டத்தைதான் இன்றும் அரசாங்கம் வழங்கி கொண்டு இருகின்றது. புரட்சிதலைவரின் திட்டங்கள் இன்றும் ஏழை எளிய மக்கள் நெஞ்சத்தில் நீங்கா இடம்பெற்றுள்ளன. இன்றைக்கும் ரேசன் கடைகளில் சேலை வாங்கினால் கூட இது எம்ஜிஆர் சேலை என்று மக்கள் கூறுகின்றனர். .புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மிட்டா மிராசு தாரர்களுக்கு இந்த கட்சியை ஆரம்பிக்கவில்லை. கிழிந்த சட்டையையும் ஒட்டிய வயிறையும் பார்த்து ஆரம்பித்த கட்சி தான் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். பாட்டாளிகள், படைப்பாளிகள், நெசவாளிகள் வாழ்க்கைத்திறன் முன்னேற்றத்திற்காக இந்தக் கட்சியை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆரம்பித்தார். இந்த கட்சி ஆரம்பிக்கப்பட்ட நோக்கமே ஏழை எளிய மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கமே ஆகும் .இது மனிதர் ஆரம்பித்த கட்சி அல்ல புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்ற புனிதர் ஆரம்பித்த கட்சி. இன்று எம்ஜிஆர் பிறந்த நாளை ஒவ்வொரு கிராமத்திலும் கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
மக்களுக்காக வாழ்ந்த தலைவர்கள் எம்ஜிஆர், அம்மா. அவர்கள். இன்று அவர்களின் வழியில் எடப்பாடியார் கட்சியை, சிறப்பாக செயலாற்றிக்கொண்டு வருகின்றார். புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மறைவிற்குப் பிறகு இந்த இயக்கத்தை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கட்டுக்கோப்பாக இராணுவ பலத்தோடு வளர்த்தார். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சி காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கான எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தினார். அம்மாவுடைய காலத்துக்கு பிறகு தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியவர் எடப்பாடியார் அவர்கள். கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில்
சொத்து வரி உயர்வு கிடையாது, மின் கட்டண உயர்வு கிடையாது, பஸ் கட்டணம் உயர்வு கிடையாது, விலைவாசி உயர்வு கிடையாது ஏழைகளை பாதிக்கின்ற எந்த செயலையும் அம்மாவுடைய அரசு செயல்படுத்தவில்லை. விருதுநகரில் தேசிய நெடுஞ்சாலையில் மிகப் பிரமாண்டமான மெடிக்கல் கல்லூரி அண்ணா திமுக ஆட்சியில் நாங்கள்தான் கொண்டு வந்தோம். சிவகாசி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டையில் அரசு கலை அறிவியல் கல்லூரியை நாங்கள்தான் கொண்டு வந்தோம். சிவகாசியில் ஒரு தனியாக கல்வி மாவட்டம் கொண்டு வந்தோம். சிவகாசி அரசு மருத்துவமனையில் 5 கோடி ரூபாய் மதிப்பில் தீக்காய சிகிச்சை பிரிவு கொண்டு வந்தோம். திருத்தங்களில் புதிய பஸ் ஸ்டாண்ட் கொண்டு வந்துள்ளோம். சிவகாசி பஸ் ஸ்டாண்டை விரிவுபடுத்தியுள்ளோம். அதிமுக ஆட்சியில் பட்டாசு தொழில் பாதுகாக்கப்பட்டது.தற்போது பட்டாசு ஆலைகளில் அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டுள்ளதால் பட்டாசு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளில் ஏழைகளுக்கான அனைத்து திட்டங்களையும் நிறுத்திய பெருமைக்கு சொந்தக்காரர்கள் திமுக ஆட்சியாளர்கள். அம்மா கொண்டு வந்த திட்டங்கள், எடப்பாடியார் கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் திமுக அரசு நிறுத்திவிட்டது. அம்மா பரிசு பெட்டகம், தாலிக்கு தங்கம், திருமணம் உதவித்தொகை, கல்வி உதவித் தொகை இப்படி பல்வேறு அதிமுகவின் திட்டங்களை நிறுத்தி விட்டனர். சைக்கிள் வழங்குவதை பகுதியாக குறைத்து விட்டனர். லேப்டாப் கொடுப்பதை நிறுத்திவிட்டனர். முதியோர் பென்ஷன் அனைத்தையும் நிறுத்திவிட்டனர். அதிமுக அரசின் எல்லா திட்டங்களும் முடக்கப்பட்டுள்ளது.
மகளிருக்கு 1000 ரூபாய் உரிமை தொகை தருவதாக சொன்ன திமுக இதுவரை வழங்கவில்லை. திமுக கொடுத்த 520 தேர்தல் அறிக்கையும் பொய் திமுக பொய்யை சொல்லி வாக்கு வாங்கினார்கள். தற்போதைய விளையாட்டு துறை அமைச்சர் விளையாட்டுதனமாக செங்கலை காட்டி மக்களை ஏமாற்றி வாக்கு வாங்கினார். திமுக ஆட்சியில் யாரும் வாழ முடியாத அளவிற்கு விலையேற்றம் உள்ளது.இன்றைக்கு திமுக ஆட்சியில் வீட்டு வரி. சொத்து வரி. சிமெண்ட் விலை கூடிவிட்டது, செங்கல் விலை கூடிவிட்டது, மணல் விலை கூடிவிட்டது, மண் விலை கூடிவிட்டதுமக்களைப் பற்றி சிந்திக்காத ஆட்சி, ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் ஆட்சியாக திமுக ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது
அரசு ஊழியர்கள் முதல்வரை எதிர்க்கட்சி தலைவராகவே அவர் இருந்திருக்கலாம் என நினைக்கின்றனர். எதிர்கட்சி தலைவராக இருந்தபோது அரசு ஊழியர்களுக்காக குரல் கொடுத்த முதல்வர் தற்பொழுது அவர்களை கண்டு கொள்வதில்லை.தமிழகத்தில் 11 ஆயிரம் பேருந்துகள் இயங்காமல் உள்ளது. பேருந்துகளை சீரமைக்க முடியாத நிலை உள்ளது.திமுக ஆட்சியில் விலையேற்றம் காரணமாக தமிழகம் ஸ்தம்பித்துள்ளது. திமுக கட்சியினரை பாதுகாக்க ஆட்சி நடத்தவில்லை குடும்பத்தை பாதுகாக்கவே ஆட்சி நடத்துகிறார்கள், திமுக கட்சியினரே திமுக ஆட்சியை விரும்பவில்லை.திமுக ஆட்சி மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர்.
முதல்வர் சொல்வதை அமைச்சர்கள் கேட்பதில்லை, அமைச்சர்கள் சொல்வதை முதல்வர் கேட்பதில்லை.
அரசு சொல்வதை மக்கள் கேட்க தயாராக இல்லை.தேர்தல் எப்பொழுது வரும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.அதிமுகவில் சண்டை ஏற்படும் போது திமுக உள்ளே புகுந்துவிடுவார்கள்.மக்கள் ஏற்றுக்கொண்டு திமுக ஆட்சிக்கு வந்ததே இல்லை.நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வர உள்ளதால் திமுகவினருக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் வரும் என்ற அச்சத்தில் திமுகவினர் உள்ளனர்.எந்த நேரத்திலும் இரு தேர்தலும் ஒரே நேரத்தில் வரலாம். மக்கள் தயராக இருந்து அதிமுகவை மீண்டும் ஆட்சியமர்த்த வேண்டும். புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா, எடப்பாடியார் ஆட்சி மக்களாட்சி மக்கள் போற்றும் ஆட்சி. அண்ணா திமுக ஆட்சி மீண்டும் தமிழகத்தில் அரியணை ஏற எப்போது தேர்தல் வந்தாலும் நீங்கள் அண்ணா திமுகவுக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.கே.பாண்டியன், மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் திருமுருகன், மாவட்ட இலக்கிய அணி தலைவர் என்.ஜி.ஓ காலனி மாரிமுத்து, மாவட்ட மீனவர் அணி செயலாளர் காசிராஜன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குறிஞ்சி முருகன், திருவில்லிபுத்தூர் பிச்சை பெருமாள்,
மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன், தலைவர் எம்.கே.என். செல்வம், சிறுபான்மை பிரிவு செயலாளர் சாகுல் ஹமீது, தகவல் தொழில்நுட்ப பிரிவு நகர செயலாளர் மாயாண்டி, வெம்பக்கோட்டை முன்னாள் ஒன்றிய கழகச் செயலாளர்கள் எதிர்கோட்டை மணிகண்டன், ராம்ராஜ்பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் வேல்முருகன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சங்கர், நகர இளைஞர் அணி செயலாளர் கார்த்திக், அம்மா பேரவை அழகர்குமார், அம்மா பேரவை செல்வகுமார், இளைஞர் பாசறை தங்கபாண்டியன், இளைஞர் அணி வடபட்டி ராசா மற்றும் மாவட்ட, மாநகர, நகர ஒன்றிய கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.சிவகாசி கிழக்கு ஒன்றிய கழக இணை செயலாளர் பாண்டியம்மாள்இளநீர்செல்வம், சிவகாசி கிழக்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் கண்ணன் நன்றி கூறினர்.கூட்ட ஏற்பாடுகளை சிவகாசி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஆரோக்கியம் சிறப்பாக செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *