• Sat. Sep 19th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக சாட்டை துரை முருகன் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவது வாடிக்கையாக அமைந்துள்ள நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று மாலை தக்கலை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் நிர்வாகிகளில் ஒருவரும் பிரபல யூ டியூப்பருமான சாட்டை துரைமுருகன் தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசினார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த தக்கலை போலீசார் சாட்டை துரைமுருகனை கைது செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட சாட்டை முருகன் பத்மநாபபுரம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் தீன தயாளன் முன் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் அவரை வரும் 25 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து சாட்டை துறைமுருகனை நாங்குநேரி சிறையில் அடைக்க போலீசார் அழைத்து சென்றனர்.