• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

மஞ்சூர் அனைத்து கடைக்காரர்கள் நல சங்கத்திற்கு காவல்துறை விழிப்புணர்வு

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் எச் கே டிரஸ்டில் நீலகிரி மாவட்ட காவல்துறை உதகை ஊரக உட்கோட்டம் மஞ்சூர் காவல் நிலையம் சார்பில் டிஎஸ்பி விஜயலட்சுமி மஞ்சூர் காவல் ஆய்வாளர் கண்மணி தலைமையில் , மஞ்சூர் அனைத்து கடைக்காரர்கள் நல சங்க தலைவர் சிவராஜ் துணைத் தலைவர் புவனேஷ் முன்னிலையில் நீலகிரி மாவட்டம் மஞ்சூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அனைத்து கடைகளிலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுப் பொருட்கள் மதுபான வகைகள் குட்கா கஞ்சா ஹான்ஸ் புகையிலை போன்ற போதை பொருட்களை விற்பனை செய்யவும் உபயோகிக்கவும் மாட்டோம்.


அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை யாரும் கடைகளிலோ வீடுகளிலோ விற்கக் கூடாது மீறினால் காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர் வியாபாரிகள் அனைவரும் தங்கள் கடைகளில் போதைப் பொருட்களை விற்பனை செய்ய மாட்டோம் என்னும் அறிவிப்புகளை கடைகளில் முன்பு பொருத்தப்பட வேண்டும் என காவல்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது முடிவில் அனைத்து கடைக்காரர்கள் நல சங்க பொருளாளர் சுரேஷ்குமார் நன்றி தெரிவித்தார்