• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

சென்னை விமான நிலையத்தில் ஓபிஎஸ் பேட்டி

ByA.Tamilselvan

Dec 18, 2022

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியுள்ள நிலையில் ஓபிஎஸ் சென்னை விமானநிலையத்தில் பேட்டியளித்துள்ளார்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வருகிற 21-ந்தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். இந்த நிலையில் சென்னையில் இருந்து மதுரை செல்வதற்காக விமான நிலையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் இன்று வந்தார். அப்போது ஓ.பி.எஸ்.யிடம் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் விளக்கம் அளித்தார். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி இருக்கிறீர்களே, இதன் மூலம் ஏதும் மாற்றம் வருமா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, கூட்டம் முடிந்த பிறகுதான் மாற்றம் இருக்குமா? என்பது தெரியும். இப்போது சொல்ல இயலாது என்று ஓ.பி.எஸ். தெரிவித்து விட்டு கடந்து சென்றார்.