• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

பாகிஸ்தான் அமைச்சரின் தலையை கொண்டு வந்தால் ரூ.2 கோடி!..

ByA.Tamilselvan

Dec 18, 2022

பிரதமர் மோடி குறித்து தரக்குறைவாக பேசிய பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோ தலையை கொண்டு வந்தால் ரூ.2 கோடி பரிசு என்று உ.பி. பா.ஜ.க நிர்வாகி அறிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோவுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாக்பாத் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. சார்பில் நேற்று போராட்டம் நடந்தது. அப்போது அங்கு பேசிய பா.ஜ.க. உள்ளூர் நிர்வாகியும், மாவட்ட கவுன்சில் உறுப்பினருமான மனுபால் பன்சால், பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோவின் தலையை துண்டித்துக் கொண்டு வருபவர்களுக்கு 2 கோடி பரிசு கொடுப்பேன் என அதிரடியாக அறிவித்தார்.