• Thu. Aug 27th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்உண்டியல் திறப்பு

Byதரணி

Dec 15, 2022

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப் பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டில் திறப்பு நடைபெற்றது.
முருகனின் அறுபடைவீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றும் அருள்மிகு சுப் பிரமணிய சுவாமி திருக்கோயில்திகழ்கிறது. வருடந்தோறும் இங்கு பக்தர்கள் கூட்டம் இருக்கும் . தற்போது ஐய்யப்ப பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில அருள்மிகு சுப் பிரமணிய சுவாமி திருக்கோயில், மதுரை இணை ஆணையர் உத்தரவுப்படி உண்டியல் திறப்பு நடைபெற்றது.

அந்த வகையில் உண்டியல் வருமானம் ரூ38,18,515/-(முப்பத்தியெட்டு லட்சத்து பதினெட்டாயிரத்து ஐநூற்று பதினைந்து மட்டும்).தங்கம்— 0.130கி( நூற்று முப்பது கிராம் மட்டும்).வெள்ளி—1.715 கி(ஒரு கிலோ எழுநூற்று பதினைந்து கிராம் மட்டும்).தகரம்—4.000கி(நான்கு கிலோ மட்டும்)செம்பு மற்றும் பித்தளை–6.900(ஆறு கிலோ தொள்ளாயிரம் கிராம் மட்டும்)திருக்கோயிலுக்கு வருமானமாக கிடைக்கப்பெற்றது .என்ற தகவலை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.