• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில
அளவிலான ஆலோசனைக் கூட்டம்

சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் திருச்சி, மேலப்புதூர், புனித மரியன்னை பேராலய கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இந்தக¢ கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் தலைமையேற்றார். கடந்த கால நடவடிக்கை தொடர்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் பிரடரிக் எங்கல்ஸ்சும், நிதி நிலை தொடர்பாக நிதிக்காப்பாளர் ஜான் லியோ சகாயராஜ் முன்வைத்தனர்.
எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் சு.ஜெயராஜராஜேஸ்வரன் முனவைத்தார். பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் ஆலோசனைக்கு பிறகு கீழ்க்காணும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது என முடிவெடுக்கப்பட்டது.

31.12.22க்குள் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அமைப்பு உருவாக்குவது.
மாவட்ட அமைப்பு உள்ள மாவட்டங்களிலும் மாவட்ட கூட்டம் நடத்தப்படுத்துவது.
27.12. 22 முதல் 29.12.22 வரை அரசியல் கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து பிப்ரவரியில் சென்னையில் நடைபெற உள்ள மாநாட்டில் பங்கேற்க அழைப்பு கொடுப்பது.
7.1.23 அன்று அனைத்து சங்க தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தை சென்னையில் நடத்துவது.
22.1.23 முதல் 10.2.23 வரை 6 குழுக்களாக மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்வது.
1.2 .23 முதல் 3.3.23 வரை சென்னையில் பிரச்சாரம் செய்வது.
11.02.2023-இல் அரசியல் கட்சித் தலைவர்களை அழைத்து 10000 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கும் மாநாட்டை நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.