• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

15 ஆண்டுகளுக்கு பிறகு தோல்வியை சந்திக்கும் பா.ஜ.க.

ByA.Tamilselvan

Dec 7, 2022

டெல்லி மாநகராட்சி தோல்வியின் மூலம் 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய தலைநகரில் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி மாநகராட்சிக்கு புதிய உறுப்பினர்களை (கவுன்சிலர்கள்) தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 4ம் தேதி நடைபெற்றது.இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மைக்கு தேவயான 126 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக டெல்லி மாநகராட்சியை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியது. இதன் காரணமாக ஆம் ஆத்மி தொண்டர்கள் மாநிலம் முழுவதும் கொண்ட்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய போது 125 வார்டுஅளுகு மேல் முன்னிலையில் இருந்த பாஜக அடுத்தடுத்த சுற்றிகளில் பின் தங்கி தோல்வியை சந்தித்துள்ளது. கடந்த முறை மாநகராட்சியை கைப்பற்றிய பாஜகவிற்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பாஜக 97 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. இதேபோல் காங்கிரஸ் 7 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளதோடு, 5 வார்டுகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.