• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உதகையில் கடும் குளிர்- இயல்பு வாழ்க்கை பாதிப்பு…

உதகையில் நிலை வரும் கடும் குளிரால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு,.விவசாயப் பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து காலநிலை மாற்றம் ஏற்பட்டு விதவிதமான காலநிலை நிலவி வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்து வந்த நிலையில் ஒரிரு தினங்களுக்கு முன்பு பனிப்பொழிவும் பகல் நேரங்களில் வெயிலுடன் கூடிய பனிமூட்டம் காணப்பட்டு வந்தது. இதன் காரணமாக பகல் நேரங்களில் கடும் வெயிலும் மாலை முதல் இரவு நேரங்களில் கடும் குளிரும் நிலவி வந்தது.இந்நிலையில் நேற்று மழையின் தாக்கம் முற்றிலும் குறைந்து மாலை நேரங்களில் கடும் குளிர் வாட்ட துவங்கியது. இரவு முழுவதும் கடும் குளிர் நிலவி வந்த நிலையில் அதிகாலை விவசாய பணிகளுக்கு செல்லும் பணியாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஆங்காங்கே தீமூட்டி குளிர் காய்ந்த படி நின்று கொண்டிருந்தனர். மேலும் வெம்மை ஆடைகளை அணிந்து கொண்டு குளிரிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொண்டிருந்தனர்.