• Sun. Oct 11th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

சென்னையில் இருந்து புறப்பட்ட விமானத்தில் திடீர் கோளாறு

சென்னையில் இருந்து 139 பயணிகளுடன் தோகா புறப்பட்ட கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. ஓடுபாதையில் இருந்து புறப்படும்போது இயந்திரக் கோளாறு இருப்பதை கண்டுபிடித்த விமானி விமானத்தை தரையிறக்கினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. உரிய நேரத்தில் இயந்திரக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டு விமானம்
தரையிறக்கப்பட்டதால் பயணிகள் உட்பட 144 பேர் உயிர் தப்பினர். பயணிகள் தற்போது ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இயந்திரக் கோளாறு சரிசெய்யப்பட்ட பின்னர் விமானம் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.