• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

காங்கிரஸ் இல்லாமல் திமுகவால் வெற்றி பெற முடியாது -வைரல்வீடியோ

ByA.Tamilselvan

Dec 1, 2022

காங்கிரஸ் இல்லாமல் தி.மு.க.வால் வெற்றி பெற முடியாது என காங்கிரஸ் தலைவர் கூறியிருப்பது கூட்டணி கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இணையதள ஊடகம் ஒன்றிற்க்கு அளித்த பேட்டியில் காங்கிரஸ் கட்சி இல்லாமல் திமுகவால் வெற்றி பெற முடியாது என கூறியுள்ளார். மேலும் அவர் கூறும்போது வரும் தேர்தலில் காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் கொடுத்தால் வெற்றி பெற மாட்டார்கள் என்று கூறுகிறார்கள்.

ஆனால் நாங்கள் இல்லாமல் கூட்டணி கட்சியால் வெற்றி பெற முடியாது.இதை 2019 – மற்றும் 2021 தேர்தலில் நிரூபித்துள்ளோம். எனவே 2024 தேர்தலில் திமுகவிடம் அதிக தொகுதிகள் கேட்போம் என்றும் தெரிவித்துள்ளார்.இக்காணொளி, தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.