• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தரமற்ற பணிகளை மேற்க்கொள்ளும் ஒப்பந்ததாரர்களை கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும்

உதகை நகராட்சி பகுதிகளில் தரமற்ற நிலையில் பணிகளை மேற்க்கொள்ளும் ஒப்பந்ததாரர்களை கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும் என நகரமன்ற சாதாரண கூட்டத்தில் நகரமன்ற துணை தலைவர் வேண்டுகோள்…
உதகை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் உள்ள அடிப்படை வசதிகள் தொடர்பான சாதாரண கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைப்பெற்றது.
நகர மன்ற தலைவர் வாணீஸ்வரி தலைமையில், நகராட்சி ஆணையாளா காந்திராஜ் முன்னிலையில் நடைப்பெற்ற இக்கூட்டத்தில் தெருவிளக்கு, நடைப்பாதை, குடிநீர், கழிப்பிட வசதி, மழை நீர் வடிகால், பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மழைக்காலங்களில் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் அபாயகரமான மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நகரமன்ற உறுப்பினர்கள் முன் வைத்தனர்.நகர மன்ற துணை தலைவர் பேசிய போது சுற்றுலா பயணிகள் முகம் சுளிக்கும் வகையில் உதகை மலை ரயில் நிலையம் முன்பு உள்ள இறைச்சி கடைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.மேலும் விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்களுக்கு நோட்டீஸ் அனுப்பாமல் ஏழை, எளிய மக்கள் தகரத்தால் ஆன ஷெட்டுகளை அகற்ற நோட்டீஸ் அனுப்பி வருவது குறித்து நகரமன்ற உறுப்பினர்கள் கேள்விகளை எழுப்பினர்.இக்கூட்டத்தில் நகரமன்ற துணை தலைவர் ரவிக்குமார், நகரமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஜார்ஜ், முஸ்தபா உள்ளிட்ட 36 வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.