• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இரண்டு வாரத்தில் 45 பாம்புகளைப் பிடித்த பாம்பு பிடி வீரர்

ஈரோடு சேர்ந்த பாம்பு மீட்பாளர் யுவராஜ் 2 வாரங்களில் 45 பாம்புகளை பிடித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை ரோடு பழைய பாளையத்தில் இயங்கி வரும் ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை வளாகத்தில் வாகனம் நிறுத்தும் இடத்தில் சுமார் 9 அடி நீளம் உள்ள பாம்பு ஒன்று அடிக்கடி மருத்துவர்,செவிலியர் மற்றும் அங்கு பணிபுரியும் வேலையாட்கள் கண்களில் தென்பட்டுக் கொண்டிருந்திருக்கிறது.
நேற்று அதேபோல் இரண்டு சக்கர வாகனத்தை எடுக்கச் சொல்லும் போது அந்தப் பாம்பு மீண்டும் வேலையாட்கள் கண்களில் பட்டுள்ளது. அவர்கள் உடனே மேலாளருக்கு தகவல் தெரிவிக்க, பாம்பு பிடிக்கும் யுவராஜை அழைத்துள்ளார்கள்.சம்பந்தப்பட்ட இடத்திற்கு அவர் உடனடியாக விரைந்து வந்து அங்குள்ள பொருட்களை அப்புறப்படுத்திவிட்டு அங்கு சுருண்டு படுத்திருந்த பாம்பை பத்திரமா லாவகமாக பிடித்தார்.


பிடிபட்ட அந்தப் பாம்பு சுமார் ஒன்பது நீளமுள்ள கருஞ்சாரை வகை சார்ந்தது. மூன்று நான்கு மாதங்களாக பயமுறுத்தி சுற்றிக் கொண்டிருந்த பாம்பு பிடிபட்ட மகிழ்ச்சியில் மருத்துவமனை ஊழியர்கள் டாக்டர்கள் செவிலியர்கள் அனைவரும் உற்சாகத்தில் ஆழ்ந்து போனார்கள்.
மேலும் இது பற்றி யுவராஜ் கூறியதாவது கடந்த இரண்டு வாரங்களில் 45 க்கும் மேற்பட்ட பாம்புகளை மீட்டுக் கொடுத்திருக்கிறேன். மழைக்காலம் பொதுமக்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் இந்த ஒரு மாதத்தில் பாம்பு கடியால் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் உயிரை இழந்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.குறிப்பாக காமதேனு நகரில் குடியிருப்பு வீட்டில் வாசலில் நின்று கொண்டிருக்கும் போது கட்டுவிரியன் தீண்டி ஒரு அம்மா இறந்து விட்டார்கள் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.அவசர அழைப்புக்கு அழையுங்கள் ஈரோடு யுவராஜ் பாம்பு மீட்பாளர் 7373730525