தேசப்பிதா அண்ணல் மகாத்மா காந்தியின் 78_வது நினைவு தினத்தில் குமரி ஆட்சியர் தேசப்பிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இந்தியாவின் தந்தை என பேற்றப்டும் மகாத்மா காந்தி மத வெளியானால் சுட்டு கொல்லபட்டதின் 78_ வது நினைவு தினத்தில், குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, கன்னியாகுமரியில் உள்ள காந்தி நினைவு மண்டபம். காந்தி அஸ்தி கரைக்கப்படும் முன் வைத்திருந்த அஸ்தி கட்டத்தில் வைக்கப்பட்டுள்ள தேசபிதாவின் உருவபடத்திற்கு, குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வில் மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி. ஜான் ஜெகத் பிரைட் கஸ்பர், குமரி சிறப்பு நிலை பேரூராட்சி முன்னாள் உறுப்பினர் தாமஸ் ஆகியோர் பங்கேற்றனர்.



காந்த மண்டலம் வளாகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள தேசப்பிதா அண்ணல் காந்தி, கல்வி கண்திறந்த பெரும் தலைவர் காமராஜரும் உரையாடிக் கொள்வது போன்ற சிலைகளையும் ஆட்சியர் அழகு மீனா வணங்கினார்.


