
மதுரை வேலம்மாள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஐடாஸ்கட்டர் அரங்கத்தில் சிவகாசி நாடார்கள் உறவின்முறை சங்கத்தின் 75-வது ஆண்டு பவள விழா சிறப்பாக நடைபெற்றது
விழா தலைவர் கூடலிங்கம் வரவேற்றார். உறவின் முறை தலைவர் சுரேஷ் கனகசபை தலைமை தாங்கினார். சிவகாசி நாடார்கள் உறவின் முறை சார்பாக செவிலியர் கல்லூரி கட்டிட அடிக்கல்லை சந்திரமோகன் திறந்து வைத்தார்.
முதியோர் இல்ல கட்டிட அடிக்கல்லை அசோகன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். தொழில் திறன் மேம்பாட்டு கட்டிட அடிக்கல்லை கனகசபை திறந்து வைத்தார். பவளவிழா மலரை அண்ணாமலை வெளியிட்டார். பவளவிழா கல்வெட்டை ரத்தினவேல் திறந்து வைத்தார்.
மூத்த நிர்வாகிகளுக்கு நினைவு பரிசு
இந்தநிகழ்ச்சியில், உறவின்முறை பொது செயலாளர்கள் கோடீஸ்வரன், ஜெயபிரகாஷ், தலைவர் சுரேஷ்கனகசபை, துணை தலைவர் பிரபாகரன், பொருளாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வேளாண் தொழில் வர்த்தக சங்க தலைவர் ரத்தினவேல்,உறவின் முறையின் 75 ஆண்டுகால வரலாற்று பயணம் குறித்து பேசினார். இதனை தொடர்ந்து முன்னாள் நிர்வாகிகள், மூத்த நிர்வாகிகள் கவுரவிக்கப்பட்டு, அவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதுகுறித்து உறவின் முறை நிர்வாகிகள் கூறுகையில், “கடந்த 1947-ம் ஆண்டு மதுரையில் சிவகாசி நடார்கள் உறவின் முறை தொடங்கப்பட்டது. அதன்பின்னர் படிப்படியாக வளர்ச்சி பெற்று, 1970-ல் பொது மருத்துவமனை மற்றும் மகப்பேறு மருத்துவமனையும், 1984-ல் சிவகாசி நாடார்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும், 1999-ல் சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி மகளிர் கல்லூரியும், 2002-ல் உறவின் முறை முதியோர் இல்லமும் அமைக்கப்பட்டது. தற்போது அடுத்த கட்டமாக, அதி தொழில்நுட்ப வசதியுடன் முதியோர் இல்லம் அமைக்கப்படுகிறது. அதுபோல், நர்சிங் கல்லூரியும், தொழில் திறன் மேம்பாட்டு கட்டிடமும் அமைக்கப்படுகிறது” என்றனர்.அதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகளின் பரதநாட்டியம் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது அதன் பின்னர் பட்டிமன்ற நடுவர் ராஜா தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது
- உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உண்டியல் வருமானம் 1கோடியே 7 லட்சத்தி 30,553 ரூபாய் வசூல் – கோவில் நிர்வாகம் தகவல்…!!!உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 11 … Read more
- உலக இதய தினத்தை முன்னிட்டு மதுரையில் மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி..,உலக இதய தினத்தை முன்னிட்டு மதுரையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு … Read more
- இலக்கியம்:நற்றிணைப் பாடல் 255: நீயே, பாடல் சான்ற பழி தபு சீறடி,அல்கு பெரு நலத்து, அமர்த்த … Read more
- படித்ததில் பிடித்தது ஊக்கமூட்டும் பொன்மொழி 1. “தடைகள் இருக்கும்.. சந்தேகங்கள் இருக்கும்.. ஆனால் கடின உழைப்பால் இவை அனைத்தையும் … Read more
- பொது அறிவு வினா விடைகள்1. அதிக ஆயுட்காலம் கொண்ட விலங்கு?ஆமை 2. எந்த விலங்கு அதிக இரத்த அழுத்தத்தைக் கொண்டுள்ளது? ஒட்டகச்சிவிங்கி … Read more
- குறள் 533பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்துஎப்பால்நூ லோர்க்கும் துணிவு பொருள் (மு.வ): மறதியால் சோர்ந்து நடப்பவர்க்குப் புகழுடன் … Read more
- தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு சார்பாக கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார்..,பஞ்சாப் மாநில சட்டப்பேரவை அலுவலகத்தில் நடைப்பெற்ற ஆய்வு கூட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு சார்பாக … Read more
- அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் வாசிப்பு திறன் கணித செயல்பாடு குறித்து, கல்வித்துறை இயக்குனர் முனைவர், க.அறிவொளி நேரடி ஆய்வு.மாணவர்களின் தனித்திறமையும் தன்னம்பிக்கையும் வளர்க்கும் விதமாக தலா 100 ரூபாய் மற்றும் பேனா பரிசு வழங்கி … Read more
- தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்…தொழிற்சாலைகளுக்கான மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர்கள் கூட்டமைப்பினர் உண்ணாவிரத … Read more
- கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளரிடம் கோரிக்கை மனு..,தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி … Read more
- குடிதண்ணீருடன் சாக்கடை தண்ணீர் கலப்பதால் பொதுமக்கள் அவதி..,சென்னை வேளச்சேரி கண்ணபிரான் தெருவில் கார்த்திகேயன் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.இந்த குடியிருப்பில் சுமார் 12 … Read more
- மதுரை வைகையாற்றில் அடையாளம் தெரியாத நபரை கொலை செய்தவர்களுக்கு போலீசார் வலை வீச்சு…மதுரையில் கரிமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆரப்பாளையம் ரவுண்டானா அருகே வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத … Read more
- மாற்றுத்திறனாளி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி…திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, கே.ராஜதானி கோட்டை, சேர்ந்த துரைப்பாண்டி மாற்றுத்திறனாளி. இவரது விவசாய நிலத்திற்கு செல்லும் … Read more
- தென்கரை ஊராட்சியில் தீவிர டெங்கு… முன்னெச்சரிக்கை நடவடிக்கை..,மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் தென்கரை ஊராட்சியில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிர டெங்கு தடுப்பு … Read more
- BSNL சார்பாக பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான ஓவியப்போட்டி…மதுரையில் அக்டோபர் 1 BSNL தினத்தை முன்னிட்டு, மதுரை BSNL சார்பாக பள்ளி மாணவ மாணவியர்களுக்கான … Read more