• Fri. Aug 14th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 74.37 சதவீத வாக்குகள் பதிவு – மாநில தேர்தல் ஆணையம்!..

Byமதி

Oct 7, 2021

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு முதல்கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று அமைதியாக நடைபெற்று முடிந்தது. தற்போது பதிவான ஓட்டுகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி, அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 81.36 சதவீதமும், குறைந்தபட்சமாக செங்கல்பட்டு மற்றும் வேலூர் மாவட்டங்களில் தலா 67 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

மேலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 81 சதவீதமும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 80 சதவீத வாக்குகளும், திருப்பத்தூரில் 78 சதவீதமும், தென்காசி மாவட்டத்தில் 74 சதவீதமும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 72 சதவீதம் நெல்லை மாவட்டத்தில் 69 சதவீத வாக்குகள் பதிவானதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.