வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க புலம்பெயர் தமிழர் நல வாரியம் என்ற புதிய வாரியம் தோற்றுவிக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.
எம்.ஜி.ஆர். அவர்களால் உருவாக்கப்பட்ட “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’” 49 ஆண்டுகளைக் கடந்து, 17.10.2021 – ஞாயிற்றுக் கிழமை அன்று “பொன் விழா” காண இருக்கும் இத்திருநாளை, கழகத்தின் ஒவ்வொரு தொண்டரும் மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டிய நேரமிது என ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவிப்பு.
“ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள் ஓரிரு மாதங்களில் மீண்டும் வழங்கப்படும்” என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் அல்லாத ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.15 உயர்ந்து தற்போது ரூ. 915.50 என்றாகியுள்ளது. இதன்மூலம் கடந்த ஓராண்டில் மட்டும் சிலிண்டர் விலை ரூ.300 உயர்ந்துள்ளது.
திரிபுராவின் மூத்த பாஜக தலைவரும், சூர்மா தொகுதியின் எம்எல்ஏவுமான ஆஷிஸ் தாஸ், திரிபுரா பாஜக அரசின் தவறான செயல்களுக்காக கொல்கத்தாவின் புகழ்பெற்ற காளிகாட் கோவிலில் மொட்டை அடித்தார், அவர் விரைவில் திரிணாமுல் காங்கிரஸில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2021ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு ஜெர்மனியைச் சேர்ந்த பென்ஜமின் லிஸ்ட், அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் மெக்மில்லனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் ’விஜய் 66’ படத்தில் நடிக்கவிருக்கிறார்.இப்படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
ஆர்யன் கானின் கைது போலியானது, அடுத்த இலக்கு ஷாருக் கான் என்று மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்திருக்கிறார்.