நாடு முழுவதும் 73வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் முன்னணி நடிகர்களான அமிதாப் பச்சன், கமல்ஹாசன், மகேஷ் பாபு, பகத் ஃபாசில் என பல திரை நட்சத்திரங்கள், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் தங்களது குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்!.
அமிதாப் பச்சன்
இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடியரசு தின வாழ்த்துக்களை நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார். தேசியக் கொடியுடன் மக்கள் வெள்ளம் தன்னை காண தனது வீட்டின் முன் இருக்கும் புகைப்படத்தை நடிகர் அமிதாப் பச்சன் ஷேர் செய்துள்ளார். மேலும், தனது தாடியையே தேசியக் கொடி போல மூன்று வர்ணங்களில் மாற்றிய த்ரோபேக் புகைப்படத்தையும் நடிகர் அமிதாப் பச்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்!

கமல்:
“இந்திய அரசியலமைப்புச் சட்டமே நம் ஒவ்வொருவரின் பலம். நாம்தான் இதன் பாதுகாவலர்கள் என்பதை உணர்வோம். அரசியலமைப்பு நமக்கு வழங்கி இருக்கும் சுதந்திரத்தின், அதிகாரத்தின், உரிமைகளின் உண்மையான மதிப்பை அறிந்து ஒற்றுமையுடன் கடமையாற்றுவோம். குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.” என உலகநாயகன் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பா. ரஞ்சித் ட்வீட்
இந்திய குடியரசின் தந்தை அம்பேத்கரை இந்த தேசமே இன்றைய நாளில் சல்யூட் செய்கிறது என அம்பேத்கரின் புகைப்படத்தை ஷேர் செய்து குடியரசு தின வாழ்த்துக்களை ஜெய்பீம் முழக்கத்துடன் கூறியுள்ளார் இயக்குநர் பா.ரஞ்சித்.

மகேஷ் பாபு
75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் குடியரசு தின விழாவை கொண்டாடுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். வீரத்துடன் இன்னுயிரை தந்து சுதந்திரம் பெற்றுத் தந்த தியாகிகளை இந்நாளில் நினைவு கூர்வோம் அமைதியையும் அன்பையும் எப்போதும் பேணுவோம் என நடிகர் மகேஷ் பாபு குடியரசு தின வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

பகத் ஃபாசில் வாழ்த்து
இந்திய தேசியக் கொடி பேக்ரவுண்டில் மலையாள நடிகர் பகத் ஃபாசில் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து ரசிகர்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை கூறியுள்ளார். மேலும், பல சினிமா பிரபலங்களும் குடியரசு தின வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

- இந்தியாவில் 10 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு சர்க்கரை நோய்10 கோடிக்கும் மேற்பட்டவர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்;2019ம் ஆண்டில் […]
- திருப்பரங்குன்றம் உண்டியல் வருமானம் ரூ52 லட்சம் உட்பட தங்கம், வெள்ளி பொருட்கள் கிடைத்தனதிருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் வருமானம் ரூ.52 லட்சம் தங்கம் 253 கிராம். வெள்ளி 2 கிலோ […]
- அடியாட்கள் மூலம் நிலத்தை கையகப்படுத்த முயல்வதாக நில அளவையருடன் வாக்குவாதம்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அதிகாரத்தை பயன்படுத்தி நிலத்தை அடியாட்கள் மூலம் கையகப்படுத்த முயல்வதாக […]
- மின் கட்டண உயர்வு இல்லை – மின்சார வாரியம் விளக்கம்மின்சாரவாரியம் வெளியிட்டுள்ள தகவலின் படி வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டணம் உயர்வும் இல்லை , இலவச […]
- ஊட்டி மலை ரயில் விபத்து… பயணிகளுக்கு பாதிப்பில்லைஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் பயணிகளுக்கு பாதிப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளதுஒடிசா மாநிலம் […]
- தென்மேற்கு பருவமழை தொடங்கியது – வானிலை ஆய்வு மையம்தென்மேற்கு பருவமழை கேரளா பகுதிகளில் இன்று தொடங்கி உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள […]
- திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உண்டியல் எண்ணும் பணிதிருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் சித்திரை மாதம் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. மதுரை மாவட்டம் […]
- ஆளுநர் அவராக பேசுகிறாரா..யாரும் அறிக்கை அனுப்பி பேச சொல்கின்றனரா – செல்லூர் ராஜூ பேட்டிஆளுநர் ஆர்.என்.ரவியின் அரசியல் கருத்துகளை ஏற்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.ஆளுநர் […]
- ‘லிவ் இன்’ காதலுடன் வசித்துவந்த பெண் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலைலிவ் இன் காதலுடன் வசித்துவந்த பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்படுள்ளது.மராட்டிய […]
- உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம்கீழமாத்தூர் உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் கீழமாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 182: நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்றுஓவத்து அன்ன இடனுடை வரைப்பின்பாவை அன்ன நிற் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத் தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும், வகுப்பில் உள்ள […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று மனிதர்களுக்கு தூய காற்று, ஊட்ட மிகு உணவு வழங்கும் உலகப் பெருங்கடல்கள் நாள்நாம் சுவாசிக்கும் தூய காற்றையும், ஊட்ட மிகு உணவையும் வழங்கும் கடல்கள் – உலகப் பெருங்கடல்கள் […]
- இன்று சனிக்கோளின் நான்கு நிலாக்களை கண்டுபிடித்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள்சனிக்(காரிக்)கோளின் நான்கு துணைக்கோள்களைக் கண்டறிந்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள் இன்று (ஜூன் 8, […]