• Tue. Jun 16th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

பனிச்சரிவில் சிக்கி 7 ராணுவ வீரர்கள் மாயம்

Byகாயத்ரி

Feb 8, 2022

அருணாசலப்பிரதேசத்தில் மலைப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த 7 ராணுவ வீரர்கள் பனிச்சரிவில் சிக்கி மாயமாகியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அருணாசலப் பிரதேசத்தின் மிக உயர்ந்த மலை உச்சியான காமெங் செக்டாரில் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகமாக இருந்த நிலையில் நேற்று முன்தினம் வீரர்கள் வழக்கம் போல் ரோந்தில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது 7 வீரர்கள் பனிச்சரிவில் சிக்கியதாக கூறப்படுகின்றது. இதனை தொடர்ந்து அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. மேலும் மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக விமானம் மூலமாக சிறப்பு குழுவினர் விரைந்தனர். பனிச்சரிவில் மாயமான வீரர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.