திமுக பிரமுகர் ஏவி.சாரதிக்கு சொந்தமான இடங்களில் 2-வது நாளாக வருமானவரி சோதனை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பிரபல கல்குவாரி தொழிலதிபரும், திமுக பிரமுகருமான ஏவி.சாரதி வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று காலை 6.30 மணி முதல் துவங்கிய வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை தற்போது வரை நடைபெற்று வருகிறது. ஏவி சாரதிக்கு சொந்தமான ஆற்காடு அருகில் உள்ள கல்குவாரி, சிமெண்ட் குடோன், அலுவலகங்கள், வீடு மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 28 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை, இராணிப்பேட்டை, வேலூர் , பெங்களூர் உள்ளிட்ட 30 இடங்களில் வருமான வரித்துறை சோதனை இரண்டாவது நாளாக தொடர்கிறது. குவாரிகள் மூலம் வரும் கருப்பு பணத்தை சட்ட விரோதமாக சினிமாவில் முதலீடு செய்து இருப்பதும் கண்டுபிடிப்பு. 500 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.