
சிவகங்கை மாவட்டம் சாலைக்கிராமம் பேருந்து நிலையம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்களை தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளதாக எழுந்த புகாரையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்பை அகற்ற சாலைக்கிராமம் பேருந்து நிலையம், அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதியில் வருவாய் துறையினர் ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றினர். ஆனால்
இதில் ஒரு சில இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை மட்டுமே அகற்ற அரசு அதிகாரிகள் உத்தரவிட்டதாக சாலைக்கிராமம் பகுதியில் உள்ள பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். இந்நிலையில், எஞ்சியுள்ள ஆக்கிரமிப்புகளுக்கு வரும் ஆகஸ்ட் 31 வரை கெடு வழங்கி இருப்பதாகவும், ஆகஸ்ட் 31ம் தேதிக்கு பின் அனைத்து ஆக்கிரமிப்புகளும் உறுதியாக அகற்றப்படும் என வட்டாட்சியர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
