• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

2022 புத்தாண்டில் ரிலீஸாகும் 5 தமிழ்த் திரைப்படங்கள்..!

Byவிஷா

Dec 20, 2021
  1. ஒபாமா

நடிகர் ப்ரித்வி பாண்டிராஜன் ஹீரோவாக நடித்துள்ள ’ஒபாமா’ திரைப்படத்தில் மூத்த நடிகர் ஜனகராஜ், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், இயக்குநர் விக்ரம், ரமேஷ் கண்ணா, தயாரிப்பாளர் டி.சிவா, கயல் தேவராஜ் போன்ற முக்கியப் பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். நானி பாலா இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ளார்.

  1. ப்ளான் பண்ணி பண்ணணும்
    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ’பிளான் பண்ணி பண்ணனும்’ திரைப்படத்தில் ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ளனர். நகைச்சுவையான இப்படத்தினை தயாரிப்பாளர் ராஜேஷ் குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் உருவாகும் 3வது படம் இது.
  2. வேலன்

பிக்பாஸ் புகழ் முகின் ஹீராவாக நடித்துள்ள திரைப்படம் வேலன். ஸ்கை மேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை இயக்குநர் கவின் இயக்கியுள்ளார். நடிகை மினாக்ஷி நாயகியாக நடித்துள்ளார். முக்கிய கதாப்பாத்திரங்களில் பிரபு, சூரி, மரியா, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மலையாளத்தில் பிரபல இசையமைப்பாளராக இருக்கும் கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

  1. தீர்ப்புகள் விற்கப்படும்

நடிகர் சத்யராஜ் மீண்டும் ஹீரோவாக நடித்துள்ள படம் தீர்ப்புகள் விற்கப்படும். ஆக்ஷன் த்ரில்லர் படமான இப்படத்தை அறிமுக இயக்குநர் தீரன் இயக்கியுள்ளார். தடம் படத்தில் நடித்த ஸ்மிருதி வெங்கட் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இர்களுடன் ஹரிஷ் உத்தமன், ஜார்ஜ் மரியான் சார்லீ ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

  1. தண்ணி வண்டி

நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தண்ணி வண்டி. மாணிக்க வித்யா இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். வில் அம்பு புகழ் சம்ஸ்கிருதி நாயகியாக நடித்துள்ளார். தேவதர்ஷினி, பாலசரவணன், ‘காதல்’ சுகுமார், விஜய் டிவி புகழ் கோதண்டம், ‘ஆடுகளம்’ நரேன், மதுரை முத்து உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.