• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மீண்டும் துப்பாக்கி சூடு அமெரிக்காவில் 5 பேர் பலி

ByA.Tamilselvan

Sep 30, 2022

அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்து வருகிறது. மத்திய டெக்சாசில் துப்பாக்கி சூடு நடந்து உள்ளது. . இந்த துப்பாக்கி சூட்டில் 5 பேர் உயிரிழந்து பிணமாக கிடந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சந்தேக நபர் ஒருவரை போலீசார் பிடித்துள்ளனர். குடும்பப் பிரச்சினை காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. ஒரு பெண்ணுக்கும் அவரது காதலனுக்கும் குடும்ப பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. அப்போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் காதலன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் அந்த பெண்ணையும் அவரது 2 குழந்தைகளையும் சுட்டுக் கொன்றுள்ளான். துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு அந்த வீட்டிற்கு வந்த பக்கத்து வீட்டை சேர்ந்த 2 பேரையும் அந்த நபர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.