• Sun. Apr 28th, 2024

திருப்பரங்குன்றம் கோவில் உண்டியலில் இருந்து 48,63,711 ரூபாய் ரொக்கமும், 96 கிராம் தங்கமும், 1கிலோ 198 கிராம் வெள்ளியும் கிடைக்கப் பெற்றது.

ByKalamegam Viswanathan

Feb 8, 2024

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பரமணியசுவாமி கோயிலில் இன்று உண்டியல் திறந்து எண்ணப்பட்டது இதில் ரூபாய் 48 லட்சத்து 63ஆயிரத்து 711 ரூபாய் ரொக்கமாகவும், 96 கிராம் தங்கமும், 1கிலோ 198 கிராம் வெள்ளியும் உண்டியல் மூலம் கிடைக்கப் பெற்றது.

திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் மாதம் ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். இந்த நிலையில் தை மாதத்திற்கான உண்டியல் இன்று திறந்து எண்ணப்பட்டது. அதில் பணம் ரூ.48 லட்சத்து, 63ஆயிரத்து 711 ரூபாய், தங்கம் 96 கிராம், வெள்ளி 1கிலோ 198 கிராம் இருந்தது.

இதில் திருப்பரங்குன்றம் கோயில் துணை ஆணையர் சுரேஷ், உதவி ஆணையர் வளர்மதி மற்றும் புதிதாக பொறுப்பேற்றுள்ள அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மணிச்செல்வன், பொம்ம தேவன், இராமையா முன்னிலையில் ஸ்கந்தகுரு பாடசாலை மாணவர்கள், திருப்பரங்குன்றம் பக்தர்கள் பேரவை உறுப்பினர்கள் மற்றும் அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இந்த உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *