

கேரளா மட்டுமன்றி மதுரை மாவட்டம் திருமங்கலம் கள்ளிக்குடி விருதுநகர் திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை மாவட்டம் ராஜபாளையம் திருமங்கலம் சாலை ஆலம்பட்டி சேடப்பட்டி பிரிவு பகுதியில் குற்ற பிரிவு உதவி காவல் ஆய்வாளர் மாரிக்கண்ணன் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியில் சந்தேகத்திற்கு உரிய வகையில் வந்த நபர்களை நிறுத்தி விசாரணை நடத்திய பொழுது முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர்.
அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட பொழுது மதுரை மாவட்டம் செல்லூர் மேலத்தோப்பு கண்ணூர் பிரதீப் வயது 22 கீழே விழுந்ததில் காலில் காயம் ஏற்பட்டது. அவர்களிடம் மேற்கொண்ட விசாரணை நடத்தியது. போலீசார் மதுரை முனிச்சாலையை சேர்ந்த ரங்கராஜ் வயது 20 கோவலன் நகர் பகுதியை சேர்ந்த யோகராஜ் வயது 26 மதுரை ரசாயன பட்டறை பகுதியில் சேர்ந்த ராஜபாண்டி வயது 21 என்பதும் தெரிய வந்தது.

இவர்கள் நால்வரும் கேரள மாநிலம் மற்றும் மட்டுமின்றி மதுரை மாவட்டம் கள்ளிக்குடி திருமங்கலம், .மற்றும் விருதுநகர், திண்டுக்கல், மாவட்டம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. நான்கு பேர்களிடமிருந்து இருசக்கர வாகனங்களும் நான்கு அலைபேசி 3 பவுன் தங்கச் சங்கிலி ஒரு வெள்ளி செயின் இரண்டு கத்திகள் உள்ளிட்ட பறிமுதல் செய்யப்பட்டது.
காயம் அடைந்த கண்ணூர் பிரதீப், சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். இவர்களை கைது செய்த போலீசார் எஸ்பி .அரவிந்தன் ஏ எஸ் பி அன்கல் சுல்தான் நாகர் காவல் ஆய்வாளர் சுப்பையா ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

