கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி, விஜய் நடிப்பில் உலகமெங்கும் வெளியான திரைப்படம் பீஸ்ட். கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் முதல் நாளிலேயே 100 கோடி வசூலாகி பாக்ஸ் ஆபீஸில் ரேட்டிங்கை பெற்றது. உலகம் முழுவதும் பீஸ்ட் படத்தின் வசூல் ரூ. 240 கோடியை தாண்டியுள்ளது.
இதையடுத்து விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் கைகோர்த்துள்ளார். தில் ராஜு தயாரித்து வரும் இந்த படத்தில் நாயகியாக தெலுங்கு நாயகி ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தளபதி 66 படத்தில் சரத்குமார், ஷாம், யோகிபாபு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து உள்ளனர். குடும்ப சென்டிமென்ட், ஆக்ஷன், காதல்,காமெடி என அனைத்தும் கொண்ட படமாக தளபதி 66 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜய்யின் தந்தையாக நடிகர் சரத்குமார் நடிக்க உள்ளார். கடந்த மாதம் பூஜையுடன் தளபதி 66 படப்பிடிப்பு தொடங்கி 3ம் கட்டமாக படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தளபதி விஜய் ஸ்மார்ட் லுக்கில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. கறுப்பு டீ ஷர்ட்டில், கண்ணாடி போட்டுக்கொண்டு காருக்குள் அமர்ந்து இருக்கிறார் விஜய். இந்த புகைப்படம் வெளியான சிறிது நேரத்தில் இணையத்தில் தளபதியின் ரசிகர்கள் இதுதான் தளபதி 66 லுக்கா என ட்ரெண்டாக்கி வருகின்றனர்.